புதுடெல்லி: சமையல் எரிவாயு மானியங்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் வகையில், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய மானியங்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி, ‘நேரடி மானியம் திட்டத்தில் வங்கிகள் மட்டத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. எனவே, தற்போது மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை, ஆதார் அட்டை இன்றி பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக