திங்கள், 24 பிப்ரவரி, 2014

சிதம்பரத்தில் போலியோ விழிப்புணர்வு மினி மராத்தான்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சிதம்பரம் :சிதம்பரம் ரோட்டரி சங்கம், ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளி இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போலியோ விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியை சிதம்பரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
சிதம்பரம் அருகே மணலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே மினி மராத்தான் போட்டியை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின மராத்தான் புழவழிச்சாலை வழியாக சுமார் 4 கிலோ கடந்து கொய்யாப்பிளைச்சாவடியில் முடிவுற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சீனுவாசன் தலைமை வகித்தார். ஷெம்போர்டு பள்ளி செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜமாணிக்கம் வரவேற்றார். ரோட்டரி நிர்வாகிகள் எஸ்.ஏ.லத்தீப்கான், வி.ராமகிருஷ்ணன், கே.ஜி.நடராஜன், வி.சிவப்பிரகாசம்ஸ, சோனாபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மினமராத்தான் போட்டியில் புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் பி.மணிகண்டன் முதலிடத்தையும், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.மாரிமுத்து இரண்டாமிடத்தையும், ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் ஆர்.சூரியபிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழ்களை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் வழங்கினார். ரோட்டரி மாவட்டத் தலைவர் இ.மகபூப்உசேன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக