ஞாயிறு, 19 ஜனவரி, 2014

இடபிரச்சனை காரணமாக இடம் மாறி இயங்கி வந்த ரேஷன் கடை புதிய கட்டிடத்தில் திறப்பு


பரங்கிப்பேட்டை :நல்லம் பல பிள்ளை தெருவில் புதிய கட்டடம் கட்டி இன்று 17/01/2014.அன்று மக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டது   பரங்கிப்பேட்டை தொ,வே,கூட்டுறவு வங்கி தலைவர் R,ரமேஷ் அவர்களாலும் கூட்டு...றவு வங்கி செயலாளர் D,சக்கரபாணி அவர்களாலும் திறந்து வைத்தனர் யாதவள் தெருவில் இயங்கி வந்த ரேசன்கடை இடபிரச்சனை காரணமாக பின்  நெல்லு கடை தெருவில் இயங்கி வந்தது அங்கும்‌ இடம் பிரச்சினை காரணமாக இந்த ரேசன்கடை வெகுதூரதில் மாற்றியமைக்க திட்டமிட்டு இருந்தது.இதை கேட்ட பொதுமக்கள் மிகவும் துயரதுக்கு ஆளானார்கள் காரணம். இப்போது
குடும்ப தலைவர்தான் நேரில் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் வயதானவர்கள் ரொம்ப தூரம்செல்ல முடியாதநிலை உருவாகின அதுமட்டுமில்லாமல், நல்லம்பள பிள்ளை தெரு.தீர்த்தா முதலியார் தெரு.சித்தன் தெரு.சின்னதெரு.யாதவள் தெரு.அருணாசால முதலியார் தெரு.அப்பாசாமி படையாச்சி தெரு.ஹக்கா சாஹிப் சந்து. மேட்டுத்தெரு.குருசாமி ராயர்த்தெரு.இங்கு வசித்து வரும் அனைத்து மக்களும் இந்த கடையில் ரேஷன் சாமான்கள் வாங்கி பயன் பட்டு வருகிறார்கள்.கடை இடமாற்றம் செய்தியை கேள்விப்பட்ட கவுன்சிலர் S,கோமதி சிவபாலன். பொது மக்களின் நன்மைக்காக வெகுதூரத்தில் மாற்றியமைக்கும் முயற்சியை முறியடித்து அத்தெருவில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்  திராவிடமணி R,ஏகாம்பரம் M.G,முஸ்தபா,D,முத்துசாமி.G,மணி,S,இளங்கோவேன் அனைவரது உதவியால் அனைவரும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் பேரூராட்சிமன்ற தலைவரிடம் முறையிட்டு அவர்களின் ஒத்துழைப்போடும்.இடம் தேடினார்கள் யாரும் இடம்தர முன்வரவில்லை வேதனைக்குள்ளான இக்குழுவினர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டளாமென தீர்மானித்து அன்நிர்வாகத்திடம் முறையிட்டனர்.பொதுமக்களின் நலன்கருதி அவர்களும். சம்மதித்தனர் பொதுமக்கள் ஆதரவோடு கடைக்கட்டும் பணி ஆரம்பமானது கடைக்கு செலவான தொகை (4,00000)நான்கு லட்சம் ரூபாய், ஆனது இத்தொகயை அரசிடமோ அல்லது தனிப்பட்ட நபரிடமோ கட்டாயப்படுத்தி வாங்கமல் ,நல்லம்பல பிள்ளை தெரு அப்பாசாமி படையாச்சித் தெரு மக்களிடம் மட்டும் வசூலித்து  கட்டுமான நடைபெற்றது பணிகளில் ஆள் பற்றாகுறை மற்றும் பணம் பற்றா குறையின் காரணமாக அக்குழுவினரே கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டனர்.  இதை பார்த்து சிலர் கேட்டதற்க்கு பொதுமக்களின் நன்மைக்காக செய்கிறோம் என்றனர்.தூரமாக செல்ல இருந்த கடயை பொதுமக்களின் மத்தியில் அமைத்து அனைவரும் பயன்படும் வகையில் செய்துள்ளார்கள்,அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.மேலும் இதில் ஒரு  பங்கு பெரும் தொகையை கவுன்சிலர் R.கோமதி சிவபாலன். வழங்கினர் மற்றும் சில நல்ல மனம் படைத்தவர்களும் தங்களால் இயன்ற அளவு நிதி உதவிகளை வழங்கி உள்ளனர்

 இதுபோல் மற்ற வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களும் அந்த அந்த வார்டுகளில் உள்ள சமூக சேவகர்கள் செய்வார்களா? என மக்கள் மத்தியில் எதிர்ப்பார்க்க படுகிறார்கள். மேலும் இதே நிலையில் உள்ள கும்மத் பள்ளி ரேசன் கடை நல்ல வழி பிறக்குமா ? என மக்கள் எதிர்பர்கிரார்கள்

கடை திறப்பு விழாவின் போது பரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் டாக்டர் ,முஹம்மது யூனுஸ் அவர்களூம்,துணைதலைவர் திரு,நடராஜன் அவர்களும் சிறப்பினராக கலந்து கொண்டார்கள்‌,முடிவில் மக்களின் நன்மைக்காக ரேஷன் கடையை மாற்றி கொண்டுவர பெரிதும் முயற்சி செய்த கவுன்சிலர் S,கோமதி சிவபாலன் அவர்களுக்கும் மற்றும் குழுவினார்க்கும்  மக்கள் நன்றியை தெரிவித்தார்கள். 




 
நன்றி :தகவல் படங்கள் :H.M.Ghouse 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக