செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி கட்சிக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆதரவு!

மும்பை: ஆம் ஆத்மி கட்சிக்கு தனது முழு ஆதரவு உண்டு என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், மும்பையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சிக்கு எங்களின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடி வருவது போல, ஆம் ஆத்மி கட்சியும் போராடிவருகிறது. ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு மட்டுமன்றி பொருளாதாரம் தொடர்பான விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக ஆம் ஆத்மி
கட்சியினருடன் பேசி, எங்களது கருத்துக்களையும் தெரிவிப்போம். மேலும், ஆம் ஆத்மி கட்சிப் போராட்டங்கள் தொடர்பாக எங்களது பங்களிப்பு குறித்து ஜனவரி 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசிய பிறகு, அறிவிப்பேன் என்றார் மேதாபட்கர்.மேதா பட்கரின் ஆதரவை வரவேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரானமயங்க் காந்தி கூறுகையில், “ மக்கள் பிரச்சனைகளுக்காக போராட நினைக்கும் ஒவ்வொருவருமே அரசியலில் ஈடுபட வேண்டியுள்ளது’ என்றார்.ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவரான அஞ்சலி தமானியா கூறுகையில், “மேதா பட்கர்ஆதரவு தெரிவித்திருக்கும் இந்த நாள் எங்களுக்கு மிகச் சிறந்த நாள். இந்தபுரட்சி இன்னும் பெரிய அளவில் உருவெடுக்கும்’ என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக