திங்கள், 13 ஜனவரி, 2014

சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களுக்கான வழக்குகள் குறித்து மாநில அரசுகளுக்கு ஷிண்டே மீண்டும் கடிதம்!

புதுடெல்லி: சிறையில் வாடும் சிறுபான்மை இளைஞர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆராய குழுக்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் வெள்ளிக்கிழமை கூறுகையில், “சிறுபான்மை இளைஞர்களின் வழக்குகளைக் குறித்து ஆராய, பொடா சட்டத்தில் இருந்தது போல ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழுக்களை மாநில அளவில் அமைப்பது குறித்து முதலமைச்சர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதவுள்ளேன். ஏற்கெனவே சிறுபான்மை சமூகத்தினரைக் கைது செய்கையில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். மத, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் அதே வேளையில், காவல்துறையினர் பயங்கரவாதத்துக்கு துளியும் இடம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக