புதன், 8 ஜனவரி, 2014

8 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்க்க அனுமதி மறுக்கும் சட்டம்:சவூதி தொழில் அமைச்சகம் ஆலோசனை

ரியாத்:8 ஆண்டுகளுக்கு மேல் இனிமேல் சவூதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்க்க அனுமதி மறுக்கும் புதிய சட்டம் கொண்டுவர தொழில் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
நிதாகத் சட்டத்திற்குப் பின்னர் அடுத்த அதிரடியாக சவூதி கொண்டுவர ஆலோசித்துள்ள இச்சட்டம், இந்தியா உட்பட பல வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய நெருக்குதலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய சட்டத்தின்படி,
* 8 ஆண்டுகளுக்கு மேல் எந்த வெளிநாட்டினரும் சவூதியில் பணிபுரியமுடியாது.
*சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில பட்டப்படிப்பை முடித்துள்ளவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.
* மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்பத்துடன் சவூதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 2 ஊழியர்கள் எனக் கணக்கிடப்படுவர்.
* 6000 ரியாலுக்கு மேல் மாத சம்பளம் பெறுபவர் 1.5 புள்ளிகள் என்ற வகையிலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் 2 புள்ளிகள் பெற்றவராகவும் கருதப்படுவர்.
* பாலஸ்தீனியர் உள்ளிட்ட நாடு துறந்த அகதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
இச்சட்டத்தை அமுலாக்கும்வகையில் மிக விரையில் தொழில் அமைச்சகம் அரசுக்கு அனுப்ப உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக