கடலூர்:வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அலைகள் சீற்றத்தால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். 4–வது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது
கடலூர் பகுதியில் இன்றும் அலைகளின் சீற்றம் தொடர்ந்தது. எனவே 4–வது நாளாக இன்று பெரும்பான்மையான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதேபோல் பரங்கிப்பேட்டை பகுதியில் சாமியார்பேட்டை , புதுப்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதி மீனவர்களும் 4–வது நாளாக இன்று கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டு ஓய்வெடுக்கின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக