புது டெல்லி :பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தபோது, சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று பெட்ரோலியத் துறை கூறி வந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்று 12 சிலிண்டர்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு கூடி முடிவு செய்யும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக