கடலூர்: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான
நேர்க்காணல் முகாம் கடலூரில் நாளை நடக்கிறது.இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சுகாதாரத்
துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக
தமிழகம் முழுவதும் 629 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இதுவரை 22 லட்சத்து 14
ஆயிரத்து 500 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு
ஆட்கள் தேர்வு நாளை (5ம் தேதி) காலை 9:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை, கடலூர்
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உளள 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அலுவலகத்தில்
நடக்கிறது. இதில் ஓட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும், 23 வயதிற்கு
மேற்பட்ட 35 வயதிற்குட்பட்டவராகவும், 162.5 செ.மீ., உயரம் உடையவராகவும் இருக்க
வேண்டும்.
மூன்று ஆண்டிற்கு முன் இலகு ரக ஓட்டுனர் உரிமம் மற்றும் "பேட்ஜ்'
பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு எழுத்து, தொழில்
நுட்பம், மனித வளம், கண் பார்வை மற்றும் சாலை விதிகள் தொடர்பான தேர்வுகள்
நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 9 நாள் பயிற்சி அளித்த பின் பணி
வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஏ.என்.எம்., அல்லது,
ஜி.என்.எம் அல்லது டி.எம்.எல்.டி., முடித்தவராகவும், 20 முதல் 30
வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவர்களுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ
நேர்முகத் தேர்வில் உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பாகவும்,
மனிதவளத் துறை குறித்து நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு 50
நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.ஒட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு
தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்கும் இட வசதியும், தினசரி
உணவுப்படியாக 100 ரூபாய் வழங்கப்படும்.இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர்
044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக