துபாய்: ஐக்கிய அரபு அமீரத்தில் 42-வது தேசிய தினம் டிசம்பர் 2 -ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவெய்ன், ஃபுஜெய்ரா உள்ளிட்ட 7 அமீரங்களிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் வானவேடிக்கைகளும் நடைபெற்றன.
அமீரகத்தின் தேசிய தின விழாவினையொட்டி ஒவ்வொருவரும் தங்களது கார், வீடு மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அமீரக தேசியக் கொடியினால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் சாலையெங்கும் அமீரகத்தின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் பிற நாட்டவரும் தேசிய தின விழாவினை உற்சாகமாக கொண்டாடினர்.
பிறந்த குழந்தைக்குக் கூட தேசியக் கொடியில் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. மேள தாளம் முழங்க ஏராளமானோர் சாலைகளில் உற்சாகமாக வந்தனர். தேசிய தினத்தை ஒட்டி அமீரகத்தின் அனைத்து மாகாணங்களிலும் 2 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக