தஞ்சாவூர்: உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று (30ஆம் தேதி) இரவு காலமானார்.
விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் கோ.நம்மாழ்வார். இவர் தற்போது மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை, அத்திவெட்டி அருகே பிச்சினிக்காட்டில் உள்ள விவசாயி லெனின் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு இன்று ( 30ஆம் தேதி) இரவு திடீரென மூச்சு திணரல் ஏற்பட்டு, இரவு சுமார் 9.30 மணியளவில் மரணம் அடைந்தார்.
காலமான விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 1938ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. விவசாயம் படிப்பு படித்தார். 1960ஆம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மலைப்பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். விவசாயம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1963ல் பணியில் இருந்து விலகினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக