செவ்வாய், 5 நவம்பர், 2013

பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வில்லை.

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரை பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வில்லை.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெள்ளாற்று முகத்துவாரம் தூர்ந்ததா பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடை கடற்கரையோர மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வெள்ளாற்று முகத்துவாரத்தில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் விசைப்படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளும் கடலுக்கு சென்று வந்தன. சில நேரங்களில் முகத்துவாரத்தில் பல படகுகள் சிக்கிக் கொண்டன. இந்த படகுகளை வேறு படகுகளை கொண்டு கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளாற்று முகத்தூவாரம் முற்றிலுமாக தூர்ந்துபோனதால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடை பகுதி மீனவர்கள் கடந்த ஒரு மாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகளில் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தன.
நேற்று பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோரங்களில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த தங்கள் படகுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று வைத்தனர்.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக