ஞாயிறு, 3 நவம்பர், 2013

உளவு பார்த்ததில் அமெரிக்காவுக்கு உதவிய ஆஸ்திரேலியா-திடுக்கிடும் தகவல்!

சிட்னி: உலக நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட அமெரிக்காவுக்கு, ஆஸ்திரேலியா உதவியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கான களமாக அந்தந்த நாடுகளின் ஆஸ்திரேலிய தூதரகங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக, அமெரிக்க சீ.ஐ.ஏ உளவுப் பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல, இந்தியா, சீனா மற்றும் மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ஸ்னோவ்டன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய தூதுவரை இந்தோனேஷிய அதிகாரிகள் அழைத்து விளக்கம் கோரியுள்ளனர்
source:inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக