திங்கள், 25 நவம்பர், 2013

பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளியில் மைக்ரோசாஃப்ட் பயிற்சியாளர்கள்


பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை யில் இயங்கி வரும் சேவாமந்திர் பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு வருகை புரிந்த,உலகப் புகழ் கணினி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளின் பல பகுதிகளிலிருந்தும் ,  31 ஊழியர்கள் அப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவியருக்கு அடிப்படை கணினி அறிவியல் குறித்து பயிற்சி அளித்துள்ளனர்

'பெரியம்மா' என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்திய கிராமப்புறங்களில் கணிப்பயிற்சிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிவருகிறது. அதனையொட்டி, பரங்கிப்பேட்டையின் சேவாமந்திர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்த 31 மைக்ரோசாஃப்ட் ஊழியர்களும் கணினிப் பயிற்சியளித்தது மட்டுமின்றி, 30 மடிக்கணினிகள், அச்சு எந்திரங்கள், இணைய வசதி ஆகியவற்றை அன்பளித்துச் சென்றனர்.
 
 


எம்-எஸ் ஆஃபிஸ் எனப்படும் தொகுசெயலிகளில், குறிப்பாக, வேர்ட், எக்செல் ஆகியவற்றில் மாணவியருக்கு இவ்வூழியர்கள் பயிற்சியளித்துள்ளனர்.

பள்ளி அறக்கட்டளைப் பொறுப்பாளரான லீலா 'பள்ளியின் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி சிறப்புற்றது' என்றும், இக்கணினிகளை மாணவியரின் கல்வித் தேவைக்காக மட்டுமே உபயோகிக்க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக