திங்கள், 25 நவம்பர், 2013

பரங்கிப்பேட்டை பகுதிகளில் 10 மணி நேரம் மின்வெட்டு:மக்கள் அவதி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் பகலில் 6 மணி நேரம், இரவில் 4 மணி நேரம் என மின்சாரம் தடைசெய்யப்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
தினசரி 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதால், மின்சாரம் எப்போது நிறுத்தப்படுகிறது, எப்போது வரும் என்பது தெரியாததால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.   தொடர் மின்வெட்டால் இன்வெர்ட்டர்கள் கூட சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். , வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தடைபட்டுள்ளதால் தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் நகர்ப் பகுதிகளில் பகலில் 4 மணி நேரம், இரவில் 3 மணி நேரம், கிராமங்களில் பகலில் 6 மணி நேரம், இரவில் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
 மின்தடையால் வியாபார கடைகள் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் எந்தவித பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.  
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக