முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ். முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் நடைபெறும். இவ்வருடம் ஹஜ்ஜின் வழிபாடுகளுக்காக உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவில் குவிந்துள்ளனர்.
ஹஜ்ஜின் முக்கிய வழிபாடுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதற்காக உலகமெங்கும் இருந்து வந்திருக்கிற ஹஜ் யாத்ரீகர்கள் மினா என்ற பகுதிக்கு, நேற்று இரவு முதல் சென்று கொண்டு இருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து பயணித்துள்ள ஹஜ் யாத்ரீகர்கள் குறித்து கூறிய இந்தியன் ஹஜ் கவுன்சில் ஃபயஸ் அஹமது கிட்வை, "திட்டமிட்டபடி இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாகனங்களின் மூலம் மினாவை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். மேலும், காலையும் மாலையும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சவூதி ஹஜ் அதிகாரிகளின் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியன் ஹஜ் கமிட்டி மூலம் யாத்திரை மேற்கொண்டுள்ள ஒருவர், ஹஜ்ஜின் முக்கிய இடங்களான அரஃபா, முஸ்தலிபா போன்ற பகுதிகளுக்குச் செல்ல இந்த வருடம் முதல் ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலவச உணவுக்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக