புதன், 23 அக்டோபர், 2013

வண்டிக்காரத் தெருவில் ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சங்க ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா நடந்தது.
ஆட்டோ சங்க தலைவர் அசாருதீன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலர் ஷாஜகான், செந்தில், நஜிருதீன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பஸ்லான் வரவேற்றார். புதிய ஆட்டோ ஸ்டேண்டை பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் திறந்து வைத்து பேசினார். துணைச் செயலர் ஷாஜா மைதீன், பொருளாளர் மன்சூர், விஜி, முகம்மது அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர்.




 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக