செவ்வாய், 22 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை நேரடி நெல் விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் போதிய மழையின்மை, கர்நாடகாவில் இருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறந்துவிடாதது உள்ளிட்ட காரணங்களால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் நடவு பயிரை தவிர்த்து நேரடி நெல் விதைப்பு செய்தனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குறியாமங்களம், தச்சகாடு, வல்லம், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு, பூவாலை, கொத்தட்டை, பெரியகுமட்டி, சின்னகுமட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.
இக்கிராமங்களில் நெற்பயிர்கள் முளைத்து நன்கு வளர்த்து வந்தது. ஆனால் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்பததால் நேரடி நெல் விதைப்பு செய்த நெற்பயிர்கள் காய்ந்தன.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதிகாலை பரங்கிப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிச்சியடைந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக