வியாழன், 3 அக்டோபர், 2013

பெட்ரோல் நிலையங்களில் 5ம் தேதி முதல் சிலிண்டர் விற்பனை!

டெல்லி: சென்னை உள்பட 5 மாநகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வருகின்ற 5 ஆம் தேதி முதல் 5 கிலோ சிலிண்டர் விற்பனை தொடங்கப்படுகிறது.தனியாக வசிப்பவர்கள், மாணவர்கள், அவசர காலங்களில் உடனடியாக சிலிண்டர் தேவைப்படுபவர்களின் வசதிக்காக 5 கிலோ எடையுள்ள சிறிய சமையல் கியாஸ் சிலிண்டர்களை பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்ய மத்திய அரசின் பெட்ரோலியத்துறை முடிவு செய்துள்ளது.அக்டோபர் 5இந்த திட்டத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பெங்களூரில் நடக்கும் விழாவில் அக்டோபர் 5ம் தேதி தொடக்கி வைக்கிறார்.இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை கம்பெனிகள் நேரடியாக நடத்தி வருகிற பெட்ரோல் நிலையங்களில் மட்டும் இந்த சிலிண்டர் விற்பனை செய்யப்படும். இந்த சிலிண்டருக்கு அரசின் மானியம் கிடையாது, சந்தை விலையிலேயே விற்கப்படவுள்ளதால் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்களை மாற்றலாம்
 
அதேபோல், ஒரு குறிப்பிட்ட சிலிண்டர் விநியோகஸ்தரின் சேவை திருப்திகரமாக இல்லாவிட்டால் மற்றொரு விநியோகஸ்தரின் சேவைக்கு மாறும் வசதியையும் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக