புதன், 30 அக்டோபர், 2013

ஆந்திராவில் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!

ஹைதராபாத்:ஆந்திராவில் அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்திருக்கிறது.

பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில்
பேருந்து மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்தில் தீப்பிடித்தது.பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேரும் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக