புதன், 11 செப்டம்பர், 2013

பரங்கிப்பேட்டை பசுமை புரட்சிக்கு வித்திட மேலும் ஓர் அமைப்பு -பசுமை PNO

 
பரங்கிப்பேட்டை:முந்தய காலங்களில் பசுமைபேட்டை யாக   இருந்த நமதூர் வரும் காலங்களில் பாலைவன பேட்டை என்று மாறும் நாட்கள் வெகு தூரம் இல்லை  என்பதை நாம் உணர்ந்ததே காலம் கடந்த பின்னர் தான்
மேலும்  தானே புயலினால் பல ஆயிரம் மரங்கள் நமதூரில் அழிந்த நிலையில்

நமது ஊரை சுற்றி  இருந்த 2500 ஏக்கர்  மரங்கள் அழிக்கப்பட்டு கார்பரேட் எனும் பணப்பிசாசுகளால்
விஷம் காக்க போகும் அனல் மின் நிலையம் சாயப்பட்டறை இன்னும் எத்தனையோ தொழிற் சாலைகள் பரங்கிப்பேட்டையை சுற்றி  வந்து விட்ட இந்த தொழிற் சாலைகள் பெரும் ஆழ் துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நிரை உரிஞ்சி  கொள்ளை
 அடித்துக்கொண்டு உள்ளது
 12 அடியில் குடிநீர் கிடைத்த நமதூரில் வரும் காலங்களில் நிலத்தடி நிர் வற்றி குடிநீர் பற்றாக்குறை ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது  நிலத்தடி நீர் பாதுகாப்புக்குழுவாக நாம் தொடர்ந்து செயல்பட்டால் தன்னலம் பாராமல் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு – தொடர்ந்து பாடுபட்டால் தான் ஓரளவாவது பாதுகாப்பு வளையத்தை பெற முடியும்.
திக்கு தெரியாமல் நிற்பதை விட இருந்த இழந்த பசுமையை மீண்டும் பெற முடியாது இனி அதை கடுகளாவது உருவாக்குவது என மரங்களின் பலனை அறிந்த சில தன்னார்வலர்கள் பரவலாக மரங்களை வளர்க்க வேண்டும்  என முன் வந்த முயற்சியால்

பரங்கிப்பேட்டையில் முன்பு(CWO) கிரஸண்ட் வெல்ஃபர் ஆர்கனைசேஷன் மரக்கன்றுகளை நட்டின.

ரஹ்மான் டிரஸ்ட், (GREEN PROJECT)பசுமை வீதி என்ற கொள்கையோடு கும்மத்துப்பள்ளித் தெருவில் வரிசையாக மரங்களை வைத்து வளர்த்து வருகின்றது.

அல்ஹாஸ் அறக்கட்டளை சார்பாக பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டப்பட்டு வளர்க்க ஆவன செய்யப்படுட்டுள்ளன.

பள்ளிவாசல்களின் வளாகங்களில் தோட்டம் என்றத் திட்டத்துடன் பசுமை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கிரின்நோவோ (GREEN NOVO)எனும் அமைப்பு  மரம் வளர்க்கும் பணி மற்றும் பள்ளி வாசல் நிர்வாகத்தோடு இனைந்து குளங்கள் தூர் வருவது  ஊரில் உள்ள பொது  கிணறுகள் தூர் வருவது போன்ற பணிகளை  செய்து வருகின்றது .
தற்போது

பசுமை PNO  என்ற மனதிற்கு இதமளிக்கும் பெயருடன் பரங்கிப்பேட்டையின் நண்பர்கள் வட்டம் ஒன்று ஊரை அழிவிலிருந்து பாதுகாக்க ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.














பசுமை PNO  அமைப்பின் பனி சிறக்க PNO Express யின் சார்பாக வாழ்துக்கள்
மரம் வளர்ப்போம் மழை பெருவோம் நிலத்தடி நிறை காப்போம்
மரம் வளர்ப்போம் சுற்று புற சுழல் காப்போம்
மரம்  வளர்ப்போம் பசுமை காப்போம்

படங்கள் : பசுமை முக நூல் பக்கம் 

3 கருத்துகள்:

  1. good effort we all must support to
    Green PNO and other nature lover groups

    Basheer

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறப்பான முயற்சி தான் வாழ்த்துகள்.
    இருப்பினும் ஒரே அமைப்பின் கீழ் செயல்பட்டால் இன்னும் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. மரம் வளர்ப்போம் மழை பெருவோம் நிலத்தடி நிறை காப்போம்.

    மரம் வளர்ப்போம் சுற்று புற சுழல் காப்போம்.

    மரம் வளர்ப்போம் பசுமை காப்போம்.

    வாழ்த்துகள் கிரின்நோவோ ...

    பதிலளிநீக்கு