பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் நெடுஞ் சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி, பெரிய கடைத்தெரு, ரேவ் மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை பெரிய மதகு பாலம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இந்நிலையில் வியாபாரிகள் சாலையோரத்தில் தங்களது
கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்து வருவதால் வாரச்சந்தை நாட்களில் போக்குவரத்து
நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
photo:file
எனவே, பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
photo:file
0 கருத்துகள்:
கருத்துரையிடுக