பரங்கிப்பேட்டை:முக்கிய வழித்தடங்களுக்குச் செல்லும் மூன்று அரசு பஸ்கள்
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாததால் சுற்றுலா பயணிகள், கடற்கரையோர
மீனவ கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்
சுற்றுலா மையத்திற்கு வெளி
நாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்
கின்றனர்.
கடலூர் மார்க்கத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த காலங்களில் நேரிடையாக பிச்சாவரத்திற்கு செல்ல பஸ் வசதிகள் இல்லாததால் கடலூரில் இருந்து சிதம்பரம் சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் பிச்சாவரத்திற்கு சென்று வந்தனர்.
இதனால் அவர்களுக்கு காலவிரையம், பொருட்செலவு
ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் இருந்து பிச்சாரவத்திற்கு சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக தினமும் மூன்று முறை பஸ்கள் இயக்கப்பட்டதால் பரங்கிப்பேட்டை மற்றும் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.
அதேபோல் கடலூர் - கிள்ளை முடசல் ஓடைக்கு சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக வந்து சென்ற அரசு பஸ், சிதம்பரம்- பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளிக்கு கிள்ளை, பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக வந்துச்சென்ற அரசு பஸ் உள்ளிட்ட அரசு பஸ்கள் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்து சென்றதால் மீன் வியாபாரிகள், பஸ் பயணிகள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடலூரில் இருந்து பிச்சாவரம், கடலூரில் இருந்து கிள்ளை முடசல் ஓடை, சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி உள்ளிட்ட அரசு பஸ்கள் கடந்த ஒரு மாதமாக பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வருவதைத் தவிர்த்துவிட்டு பரங்கிப்பேட்டை பெரியத்தெரு வழியாக நேரிடையாக சென்று வருகிறது.
இதனால் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள், பஸ் பயணிகள் உள்ளிட்டவர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நின்று கிடக்கின்றனர்.
பஸ் வராதது குறித்து விபரம் தெரிந்ததும் அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியத்தெருவிற்கு நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர்.
எனவே இந்த அரசு பஸ்கள் வழக்கம்போல் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .








0 கருத்துகள்:
கருத்துரையிடுக