திங்கள், 23 செப்டம்பர், 2013

இந்திய முஸ்லிம்களில் 3-ல் ஒரு பிரிவினர் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்! – நீதிபதி ராஜேந்திர சச்சார்!

துபாய் :இந்திய முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பிரிவினர் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்வதாக முன்னாள் தலைமை நீதிபதியும், சமூக ஆர்வலருமான ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் கல்ஃபார் முஹம்மது அலியின் பி.எம்.ஃபவுண்டேசனின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வையொட்டி துபாயில் நடந்த நிகழ்ச்சியில்   ‘அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய பரிபூரணமான வளர்ச்சி’ என்ற தலைப்பில் நீதிபதி சச்சார் உரை நிகழ்த்தினார்.
அப்பொழுது அவர் கூறியது: ‘உலகமயமாக்கல் மிக அதிகமாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை பாதித்துள்ளது. நாட்டின் அனைத்து பிரிவு மக்களின் முன்னேற்றத்தின் மூலமே நாடு வளர்ச்சி அடையவேண்டும். சிறுபான்மை மக்கள் இப்போது பின் தங்கியுள்ள நிலையில் நமது நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூற இயலாது. இந்தியாவில் முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை விட பின் தங்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி திட்டங்கள் உள்ளிட்ட நிதிகளை கூட போதிய அளவில் செலவழிக்கவில்லை. இந்தியாவில் 10 ஆண்டுகளில் கிடைத்த 25 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டு முதலீட்டை சம அளவில் விநியோகிப்பதில் நமக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.’ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக