திங்கள், 23 செப்டம்பர், 2013

தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்!

புதுடெல்லி: சென்னை, லக்னொ உள்ளிட்ட சில விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு செய்துள்ளது.
விமானநிலையக் கட்டுப்பாட்டு ஆணைய ஊழியர்கள் உட்பட பலரும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், விரைவில் இந்த விமான நிலையங்கள் தனியார் மயமாகும் என்று கூறப்படுகிறது.
இவ்விமான நிலையங்களை குத்தகை ஏலம் விடுவதற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், இந்தியாவின் டாடா நிறுவனம், சகாரா, ஜி.வி.கே உட்பட  பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
குத்தகை ஏலத்தில் பங்குபெறும் நிறுவனப் பிரதிநிதிகள் விமான நிலையங்களைப் பார்வையிடுதல் அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக