புதன், 11 செப்டம்பர், 2013

வன்சாரா ராஜினாமாவை பாஜக எப்படி எதிர்கொள்ளும் - சஞ்சீவ்பட் ஐபிஎஸ்!

அஹமதாபாத்:மோடி தலைமையிலான குஜராத் அரசில் என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்டிருந்த ஐ பி எஸ் அதிகாரி வன்சாரா, சிறையிலிருந்தவாறே தம் பதவியினை ராஜினாமா செய்து கொண்டு குஜராத் அரசுக்கு 10 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில் தம் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய போலி என்கவுண்டர் கொலைகளுக்குப் பின்பலமாக இயங்கிய அமித்ஷாவுக்காக வாதாட அதிகப்பணம் கொடுத்து பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை நியமித்த மோடி, தம்மையோ தம்முடன் சிறையிலடைக்கப்பட்டுள்ள மற்ற 31 அதிகாரிகளையோ மீட்க மோடி உதவவில்லை என்றும் மோடியின் அரசியல் முன்னேற்றத்துக்காக அரசின் உதவியுடனே தாங்கள் நடத்திய என்கவுண்டர் கொலைகளுக்கு முதல் குற்றவாளி குஜராத் அரசு தான் எனவும் நேரடியாகவே குற்றம்சுமத்தியுள்ளார். அவரின் ராஜினாமாவை குஜராத் அரசு ஏற்காமல் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த விவகாரம் மோடியின் பயங்கரவாதமுகத்தை வெளிக்காட்டுவதோடு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என கருதப்படுகிறது. இவ்விசயம் குறித்து இதுவரை பாஜக தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாத நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக 2002 ல் நடந்த கலவரத்துக்கு மோடியின் வாய் மொழி ஆணை பின்பலமாக இருந்தது என நேரடியாக குற்றம்சாட்டி மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, மோடியின் அரசில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சஞ்சீவ் பட் ஐ பி எஸ், வன்சாராவின் ராஜினாமா விவகாரத்தை பாஜக இப்படி எதிர்கொள்ளும் என தம் ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்கண்டவாறு நையாண்டி செய்துள்ளார்.

1. வன்சாரா ஜாமீனில் வெளிவரமுடியாத மனவேதனையில் இப்படி எழுதியுள்ளார்.
2. வன்சாரா இஸ்லாமிய மதத்துக்கு மதம் மாறிவிட்டார்.
3. இது பாகிஸ்தான் ஐ எஸ் ஐ -ன் சதி.
4. அக்கடிதம் போலியானது.
5. சி பி ஐ வன்சாராவுக்கு நெருக்குதல் கொடுத்துள்ளது.
6. வன்சாராவுக்கும் சி பி ஐக்குமிடையில் சதி ஒப்பந்தம் நடந்துள்ளது.
7. வன்சாராவுக்கு மனநிலை பிறழ்வு ஏற்பட்டுள்ளது.
8. வன்சாரா காங்கிரஸ் பினாமியாக மாறிவிட்டார்.
9. காங்கிரஸ் துணையுடன் போலி மதச்சார்பற்றவர்களால் பின்னப்பட்ட சதி.
10. மோடி கடவுள்; கடவுள் தவறிழைப்பதில்லை!.

நன்றி: சஞ்சீவ் பட் ஐபிஎஸ்

பிரதமர் வேட்பாளர் விசயத்தில் நடந்த மோடி-அத்வானி மோதலிலேயே பாஜக ஒரு காமடி பீஸாக மாறிவிட்ட நிலையில், வன்சாரா ராஜினாமா கடித விசயத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- இளைய வைகை.

source:inneram.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக