டெல்லி :ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 6-வது சீசன் பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக , புகார் எழுந்தது.
இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் உள்ள இவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணைக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கலந்தாலோசிக்க பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில்,சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாற்றப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடையும், சித்தார்த் திரிவெடிக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக