லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம்.
உணவுப் பொருள் வீணாக்கப்படுவதன் எதிரொலியாக, நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது.
வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பைத் தாண்டுகிறதாம்.
இந்த ஆய்வில், வீணாக்கப் படும் உணவுப் பொருட்கள் வரிசையில் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 28 சதவீத உணவு பொருட்கள் விவசாயத்தின் மூலம் விளைவிக்கப் பட்ட போதும், அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உணவைப் பாதுகாக்க போதிய வசதி இல்லாமல் வீணாவதும், அதற்கு நேர்மாறாக சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாங்கிய உணவு பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுவதும் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக