சனி, 7 செப்டம்பர், 2013

சங்கரராமன் கொலை வழக்கு: 7வது முறையாக தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி 7வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. தீர்ப்புக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதி முருகன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 23 பேரில் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜேந்திர சரஸ்வதி உட்பட 10 பேர் ஆஜராகவில்லை.இதனால், விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. ஏற்கெனவே இந்த வழக்கில் தீர்ப்பு தேதி 6 முறை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக