ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சேத்தியாதோப்பில் அதிக பட்சமாக 58 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்ற நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., வருமாறு:
சேத்தியாத்தோப்பு 58, கடலூர் 55.4, அண்ணாமலை நகர் 38.8, வானமாதேவி 33.8, காட்டுமன்னார்கோவில் 32, சிதம்பரம் 31,லால்பேட்டை 29,பரங்கிப்பேட்டை 27, கொத்தவாச்சேரி 27, குப்பனத்தம் 26, புவனகிரி 21, ஸ்ரீமுஷ்ணம் 15, விருத்தாசலம் 15, பண்ருட்டி 10.2, மேமாத்தூர் 8, பெலாந்துறை 6, தொழுதூர் 6, கீழ்ச்செருவாய் 4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் நடவு பணியை துவங்கியுள்ளனர். ஆனால் மலர், மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக