செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பரங்கிப்பேட்டையில் ரூ.13 கோடியில் கட்டிய மீன் இறங்குதளம் திறக்கப்படாததால் மீனவர்கள் அவதி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட மீன் இறங்கு தளம் திறக்கப்படாததால், மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்கள் அன்னங்கோவிலில் ஏலம் விடப்படுகிறது.ஏலம் எடுக்கப்படும் மீன்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அன்னங்கோவில் கடற்கரையோரம், மீன்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய போதிய வசதி இல்லாததால், மீன் இறங்குதளம் அமைத்துதர மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று அரசு சார்பில் 13 கோடி ரூபாய் செலவில் புதியதாக மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டது.மீன் இறங்குதளத்தின் அனைத்து பணிகளும் முடிந்தும், இன்னும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை மண் தரையிலேயே கொட்டி வைக்க வேண்டிய நிலை உள்ளது.கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருதால் அன்னங்கோவில் பகுதியில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடத்தில் சுகாதாரமற்ற முறையில் மீன்களை வைத்து ஏலம் விடுவதால் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் குறைந்த விலைக்கு ஏலம் போவதாக மீனவர்கள் புலம்பகின்றனர்.எனவே புதியதாக கட்டப்பட்ட மீன் இறங்கு தளத்தை உடனே திறக்க மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக