திங்கள், 12 ஆகஸ்ட், 2013

வத்தகரையில் கருவாடுகள் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி


பரங்கிப்பேட்டை:அன்னங்கோவில் வத்தகரை கடற்கரையோரம் கோழித் தீவனத்திற்காக காயவைக்கப்பட்ட மத்தி கருவாடுகள் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கப்படும் வஞ்சரம், கவலை, கெளுத்தி, பாரை, அகிலா, மத்தி உள்ளிட்ட மீன்களை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தற்போது நாமக்கல்லில் கோழி தீவனத்திற்கு மத்தி கருவாடுகளுக்கு அதிகளவு கிராக்கி உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர் கருவாடு வியாபாரிகள் மத்தி, கெளுத்தி மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியில் காயவைத்து, கருவாடாக்கி லாரி மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வத்தகரை பகுதியில் மழை பெய்ததால் காயவைக்கப்பட்ட மத்தி கருவாடுகள் மழையில் நனைந்து சேதமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. காற்று பலமாக வீசும் போது சலங்குக்காரத் தெரு, பரங்கிப்பேட்டை, மாதாக்கோவில் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு சுகாதா ரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக