ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மோடிக்கு விசா வழங்க முடியாது: அமெரிக்கா!

வாஷிங்டன்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து தற்போதும் உறுதியான சந்தேகம் நிலவுவதால் அவருக்கு விசா வழங்க முடியாது என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் துணைத் தலைவியான கேத்ரினா லான்டோஸ் இதுபற்றி மேலும் கூறுகையில், “2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் மோடியின் பங்களிப்பு குறித்து மிக தீவிரமான சந்தேகங்கள் உள்ளன. எனவே, அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்கக்கூடாது” என்று தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, மோடி தேர்வு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இந்தியாவின் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்று மற்ற நாடுகள் அல்லது தனிநபர்கள் கூறக்கூடாது. இந்திய மக்கள் மிக கவனமாக தங்கள் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்” என்றார் கேத்ரினா. மதசுதந்திர மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்து அதிபரிடம் அறிக்கை அளிக்கும், இந்த உயர் அதிகாரி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அவருக்கு அமெரிக்கா விசா வழங்காது என கருதப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக