
திண்டுக்கல்: தமக்கு விளம்பரம் கிடைக்குமே என்பதற்காக தம் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச ஏற்பாடு செய்த திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பிரவீண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடைந்தையாக பெட்ரோல் குண்டு வீசியதாக அவரது நண்பர் கமலக்கண்ணன் என்பவரும் சிக்கியுள்ளார்.கோயம்புத்தூரில் அனுமன் சேனா என்ற அமைப்பின் தலைவர் தம்மை யாரோ கடத்திவிட்டதாக போலீசில் புகார் கூறியிருந்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா
சென்றுவிட்டு போலீசில் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.இந்த நிலையில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் 3வது தெருவில் வசித்து வரும் பாஜகவைச் சேர்ந்த பிரவீண்குமாரின் மனைவி தங்களது வீடு மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுவீசிவிட்டதாக கணவருக்குத் தகவல் கொடுத்தார். தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அவர் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.இதைத் தொடர்ந்து பிரவீண்குமாரும் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாம் பிரபலமடைவதற்காக தமது வீடு மீது வெடிகுண்டு வீச பிரவீண்குமாரே ஏற்பாடு செய்தது தெரியவந்தது.இதனால் பிரவீண்குமார், வெடிகுண்டு வீசிய அவரது நண்பர் கமலகண்ணன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக