சென்னை :மருத்துவக் கல்வி பெற மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுதம்மை வருந்தவைப்பதாக தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் நடந்தது.
அதில் பேசிய ஆளுநர், "குடியரசுத் தலைவர் அனைத்து ஆளுநர்களையும் அழைத்து காணொளி தொலைமாநாடு (வீடியோ கான்ஃபரன்சிங்) மூலம் கூட்டம் நடத்தினார். அப்போது குடியரசுத் தலைவர் உயர்கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
எனவே அனைத்து பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையை 25 சதவீதமாக அதிகரிக்க முயலவேண்டும். மேலும் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும், நிகர்நிலை பல்கலைக் கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்காக மிகவும் அதிகக் கட்டணம் பெறப்படுவதாக முறையீடுகள் வருகின்றன. இப்படி அதிகக் கட்டணம் வசூலிப்பதால் தரமாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது ஆரோக்கியமற்ற நிலையாகும். இந்த நிலை மாறவேண்டும்"
என்று குடியரசுத் தலைவரின் கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் பேசினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக