பரங்கிப்பேட்டை மூனா கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கும்மத் பள்ளி தெருவில் உள்ள ரஹ்மான்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மூனா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத் தலைவர் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து கொண்டு 154 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மூனா கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குணபாரதி, கல்லூரி பொது மேலாளர் இசாக், கல்வி நிறுவன உதவியாளர் ராஜ்குமார், பொறியாளர் பாலாஜி, கணக்கர் குமரன் உள்பட கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் மிஷ்கின் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக