வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

மவுலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கல்வியில் சிறந்து விளங்கி, தொடர வசதியில்லாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகைக்கு ப்ளஸ் 1 பயிலும் சிறுபான்மை பிரிவு மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த, 11-ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 12000 ரூபாய் இரு தவணைகளாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 959 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் நடப்பு கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிப்பு படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 100000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அத்துடன் போதுமான ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். உறுதி ஆவணம் மற்றும் விவரங்களை www.maef.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி நிர்வாகம் விண்ணப்பங்களை சரிபார்த்து: The Secrtary, Maulana Azad Education Foundation, Chelms Ford Road, New Delhi - 1100 55 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக