கடலூர்:கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 64 மில்லி மீட்டர் பதிவானது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் கடலூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்துகிறது. சில நாட்களில் மட்டும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்தது. ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் வெயில் வாட்டி வதைத்தது.
இதனால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தை வருத்தியது. மழைக்காலங்களில் உடல் நனையாதிருக்க குடை பிடித்து செல்லும் பாதசாரிகள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் குடை பிடித்து சென்றதை காண முடிந்தது. மழை பெய்து குளிர்வித்தால்தான் வெப்பம் தணியும் என்று இருந்ததால் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. கடலூரில் மழை லேசாக தூறியது என்றாலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 64 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக கடலூரில் 1.20 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. சராசரியாக 22.02 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–
பரங்கிப்பேட்டை – 61
சேத்தியாத்தோப்பு – 59
புவனகிரி – 36
லால்பேட்டை – 30
காட்டுமன்னார்கோவில் – 27
மே மாத்தூர் – 25
தொழுதூர் – 24
ஸ்ரீமுஷ்ணம் – 22
சிதம்பரம் – 19
கொத்தவாச்சேரி – 18
வேப்பூர் – 17
காட்டுமயிலூர் – 12
பெலாந்துறை – 12
கீழ்செருவாய் – 12
அண்ணாமலைநகர் – 11.20
பண்ருட்டி – 7.40
வானமாதேவி – 5.6








0 கருத்துகள்:
கருத்துரையிடுக