ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: 5-0 இந்திய தொடர் வெற்றி

புலவாயோ:ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை எந்தவித சந்தர்ப்பமும் அளிக்காமல் எளிதாகவும், திடமாகவும் 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி.

ஏற்கனேவே  4 போட்டிகளில்  வென்றுள்ள  நிலையில் புலவாயோவில் சற்றுமுன் முடிந்த 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‌ஜி‌ம்பா‌ப்வேயை வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் ·பீல்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் அபார பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியை 163 ரன்களுக்குச் சுருட்டியது. மிஸ்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், தவான் (41), ராஹானே (50), ஆட்டமிழக்காமல் ஜடேஜா 48 என எடுத்து இந்திய அணி எளிதாக வெற்றி பெற வழிவகுத்தனர்.

இந்த வெற்றியையடுத்து இந்தியா அணி 5-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணிக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்காமல்  வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காஷ்மீர் ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூலுக்கு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் விளையாட வாய்ப்பளிக்கவில்லை . இதனையடுத்து, இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 இந்திய வீரர்களில் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒரே வீரரானார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக