அப்போது சாஹர்சாவிலிருந்து பாட்னா நோக்கி நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மற்றும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றோர் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பலரது உடல் துண்டு துண்டாக சிதறியது. பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில காவல்துறை அதிகாரி எஸ்.கே. பரத்வாஜ், ரயில்வே தண்டவாளத்தை சிலர் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 37 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை என்றார்.
தற்போது இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே இச்சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரயில்வே நிர்வாகம் தலா ரூ10 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக