சிதம்பரம்:சிதம்பரத்தில் 2 போலிடாக்டர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-
சிதம்பரம் நகரில் போலி டாக்டர்கள் நடமாட்டம் இருப்பதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மேற்பார்வையில் ஒரு தனிப்படை அமைத்து நகரில் சந்தேகப்படும்படியாக உள்ள மருந்துக்கடைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் யாரும் சிகிச்சை அளிக்கிறார்களா? என சோதனை நடத்தி வந்தனர். அப்போது சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள மருந்துக்கடை அருகே இருந்த ஒரு ஆஸ்பத்திரியில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கர் (வயது 38) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்த சங்கரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், வெறும் எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதே போல், சிதம்பரம் பொன்னம்பலநகரில் உள்ள மருந்துக்கடையில் சிகிச்சை அளித்து வந்த சரவணன் (38) என்பவரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவருடைய தந்தை ஓமியோபதி டாக்டர் என்றும், அவரிடம் தெரிந்து கொண்ட மருத்துவத்தை வைத்து, அவர் ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் பி.பார்ம் படித்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரில் நேற்று ஒரே நாளில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக