வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் பார்வையிட்ட அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில்

கடலூர்:கடலூர் துறைமுகம் சந்திப்புக்கு வந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயிலை ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
சுற்றுச்சூழல், வனத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் (பயோ டைவர்சிட்டி ஸ்பெஷல்) ரயில் காலை கடலூர் துறைமுக சந்திப்புக்கு
புதன்கிழமை காலை வந்தது.
சார் ஆட்சியர் ரா.லலிதா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி புதுதில்லியில் இந்த ரயிலை மாநில முதல்வர் ஷீலா தீட்சித் தொடங்கி வைத்தார்.
62 நகரங்கள் வழியாக 19 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 1 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல், தட்பவெப்பநிலை மாறுதல், மாற்று எரிபொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த ரயில் பயணத்தின் நோக்கமாகும்.
ரயிலில் உள்ள 16 பெட்டிகளில் 8 பெட்டிகளில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரினங்களுடைய படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் என மொத்தம் 11,800 பேர் அறிவியல் ரயிலை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
காலை 10 மணி முதல் 5 மணி வரை ரயிலைப் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனஉயிரினங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பு என ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.
வரும் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்த ரயில் கடலூர் துறைமுகத்தில் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவியல் ரயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக