ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10,427 பேர் பங்கேற்பு

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 10,427 பேர் பங்கேற்றனர்.
கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள 24 தேர்வு மையங்களில் முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வு எழுத மொத்தம் 10,710 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,427 பேர் பங்கேற்றனர். 284 பேர் பங்கேற்கவில்லை.
இத்தேர்வு நடந்த மையங்களில் மாவட்ட ஆய்வு அலுவலரும், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநருமான உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களில் நேரில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பி.எட். முடித்தோருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தகுதி தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 17,588 பங்கேற்கவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக