ரியாத்:பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம்-ரியாத்: (P.I.A) யின் இஃப்தார் நிகழ்ச்சி சகோதரர் நூர்ஷா அலி இருப்பிடத்தில் நேற்று (26 ஜூலை 2013) அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரியாத் வாழ் சகோதரர்கள் சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் நடைபெற்ற கூட்டதில் ஃபித்ரா வசூல் செய்து ஜமாஅத்துக்கு அனுப்புவது
ஃபித்ரா விநியோகம்: பரங்கிப்பேட்டை மட்டும் அல்லாமல் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்கள் என அனைத்து ஊர்களுக்கும் பித்ரா வழங்குவது குறித்து ஜமாஅத்திற்கு வேண்டுகோள் வைப்பது
ஜமாஅத் வேண்டுகோளின் படி புதிய ஆம்புலன்ஸ் வாங்க வசூல் செய்யப்பட்டு ஜமாத்திற்கு அனுப்புவது
ஊரில் இருக்கும் அனைத்து வக்ஃபு சொத்துக்களையும் ஜமாஅத் ஆவணம் சேகரித்து வைக்குமாறும்
அரசு அதிகாரப் பணிகளில் நம் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து அயலகப் பரங்கியர் NRI சங்கமும் சேர்ந்து ஜமாஅத் மூலமாகவே, இனி வருங்காலங்களில் ஊரில் IAS, IPS உள்ளிட்ட படிப்புகளைப் படிக்க நினைக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப் படுத்தி அவர்களை NRI அமைப்புகளின் பொறுப்பில் எடுத்து படிக்க வைப்பது என்றும் அதற்காக NRI ஐக்களின் பிரதி நிதிகளுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
P.I.A உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்துக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கி சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது
தகவல்
H. ஹூசைன் (அபு ரய்யான்)


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக