கடலூர்:தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருடகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை மற்றும் நிகோட்டின் சேர்க்கப்பட்ட உணவு தயாரிப்புகளை விற்பனை செய்யவும், வினியோகம் செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வணிகத்துறை தணிக்கை சாவடி, காவல்துறை தணிக்கை சாவடி, போக்குவரத்து துறை தணிக்கை சாவடிகளில் சோதனை மேற்கொள்ளஉத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசின் தடை உத்தரவை மீறி இப்பொருட்களை யாரும் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து குட்கா, பான்மசாலா இல்லாத மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக