ஞாயிறு, 7 ஜூலை, 2013

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான போட்டியில் பிரான்சின் மரியான் பர்ட்டோலி சாம்பியன்

லண்டன் :விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் பிரான்சின் மரியான் பர்ட்டோலி 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் சபின் லிஸிகியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் கோப்பையுடன் பர்ட்டோலிக்கு ரூ.14.75 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த லிஸிகி ரூ.7.75 கோடியை தட்டிச்சென்றார்.
முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள பர்டோலி, விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்மைக் பிரையன் ஜோடி 36, 63, 64, 64 என்ற செட் கணக்கில் இவான் டுடிக்(குரோஷியா) மார்செல்லோ மெலோ(பிரேசில்) ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஷூவெய்(தைபே)ஷாய் பெங்க்(சீனா) ஜோடி 76, 61 என்ற நேர்செட்டில் ஆஸி.யின் பார்த்திஹேசே டெல்லாக்குவா ஜோடியை தோற்கடித்து கோப்பையை வென்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் பைனலில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், தரவரிசையில் 2வது இடத்தில் இங்கிலாந்தின் ஆன்டி முரேவை எதிர்த்து ஆடுகிறார். இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக