புதன், 31 ஜூலை, 2013

வீராணம் ஏரி தூர்வாரப்படாததால் விவசாயிகள் கவலை

சிதம்பரம்:வீராணம் ஏரி தூர்வாரப்படாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியா. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடியாகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னா£கோவில் பகுதி டெல்டா விவசாயிகள் உள்ளனர். மேலும், வீராணம் ஏரி விவசாயத்திற்கு மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இப்படி, பெருமைக்க ஏரி கடந்த 4 மாதங்களாக வறண்டு பாலைவனம் போல கிடக்கிறது. இந்த நிலையில், மேட்டூர் அணை 100 அடியை எட்டியதை தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதியில் ஆடிப் பெருக்கை கொண்டுவதற்காக கடந்த 27–ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கல்லணைக்கு 4, 5 தினங்களில் வந்து சேரும்.
ஆனால் வறண்டு கிடக்கும் வீராணம் ஏரியை, தண்ணீர் வருவதற்குள் தூர் வாரியிருந்தால் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைத்து இருக்கலாம். ஆனால் ஏரி, தூர்வாரப்படாததால், குறைந்த அளவே தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.
இது குறித்து காவிரி டெல்டா விவசாய பாதுகாப்பு சங்க துணை தலைவர் கண்ணன் கூறியதாவது:–
வழக்கமாக ஜூன் 12–ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வீராணத்திற்கு ஜூலை 1–ந் தேதி தண்ணீர் வரும். சென்ற ஆண்டு செப்டம்படர் 17–ந் தேதி தான் தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப் பட்டது. ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி வருவதை கொண்டு ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடும் விதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆகால், வீராணம் ஏரியை மார்ச் மாதத்துக்குள் தூர்வாரப்படும் என தமிழக அரசு உறுதியளித்தும். இதுவரை அப்பணிக்கான நிர்வாக ஒப்புதல்கூட வழங்காதது கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏரி தூர்வாராததால் தண்ணீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்துவிடும் சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு கண்ணன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக