புதன், 24 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை பகுதியில் சத்துணவு கூடங்களில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராஜா தலைமையிலான குழுவினர் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சத்துணவு கூடத்தில் மதிய உணவு தரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி, காய்கறிகள் தரமானதா? சுத்தமாக கழுவி சமைக்கப்படுகிறதா? சத்துணவு கூடம் சுத்தமாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தினார்கள்.
ஆய்வின் போது உணவு பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் ஏழுமலை, சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புவனகிரி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக