திங்கள், 17 ஜூன், 2013

பரங்கிப்பேட்டை -சிங்கப்பூர் (PISWA) இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

 
சிங்கப்பூர்:பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம்-சிங்கப்பூர் பொதுக்குழு கூட்டம் 16/06/13 அன்று சைனா டவுன் மஸ்ஜித் ஜாமிய சூலியாவில் நடைப்பெற்றது. 
 தலைவர் A.R.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தினை G.M.மரக்கச்சி இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் செயலாளர் H.முஹம்மது தாரிக் ஹுஸைன்,  பரங்கிப்பேட்டை
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் கோரிக்கையான புதிய ஆம்புலன்ஸ், ஜக்காத், குர் ஆன் மக்தபா - ஃபித்ரா, புதிய நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். பொருளாளர் M.G.கமாலுத்தீன் நிதி - நிலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது. 
1) சமூகநலனில் அக்றையுடைய சகோதரர் முஹம்மது அவர்களின் ஹக்கில் துஆ செய்யவம் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு சப்ர் என்னும் அழகிய பொறுமை தந்தருளவும் வல்ல இறைவனிடம் துஆ செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. 
2) புதியதாக பொருப்பேற்றிறுக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர், செயல் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 
3) குர்ஆண் மக்தப்- நிலை,வளர்ச்சி, தேவை ஆகியவை ஆலோசிக்கப்பட்டது. 
4) நிதிநிலை, கணக்குகள், சந்தா பதிவு செய்யப்பட்டது. 
5) ஜமாத்தின் ஆம்புலன்ஸ் வாங்க நிதி கோரிக்கை- நமதூரிலேயே வசித்து பொருளாதாரத்தை ஈட்டும் சகோதரர்களின் பங்களிப்பு மற்றும் பழைய ஆம்புலன்ஸ்களின் நிலைக்குறித்த விவரம் ஆகியவை பற்றி பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது. 
6) ஜகாத் மற்றும் பித்ரா வசூல் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது. 
7) வரும் நோன்போடு தற்போதைய நிர்வாகிகளின் இரண்டு ஆண்டுகள் பொருப்பு நிறைவடைவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு ரமலானுக்கு பிறகு மறுக்கட்டமைப்பு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. கூட்ட இறுதியில் தலைவர் A.R.அப்துல் கரீம் நன்றி கூறினார்.

                                                                                            
                                                                                        நன்றி MYPNO.COM 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக