கடலூர்:முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மாதம்தோறும் 2 மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறினார்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது.
மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை வகித்தார். தனித்துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், இணை இயக்குநர் கோவிந்தராஜ், துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் பேசுகையில், "காப்பீடுத் திட்டத்தின் மூலம் அதிகளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கட்டணமில்லா 23 நோய்கள், பரிசோதனை முறைகள் பற்றிய விவரங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 முகாம்களை நடத்த வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மணிவண்ணன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், பரணிதரன் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக